பிரபல ஆல்பர்ட் தியேட்டருக்கு அதிகாரிகள் திடீர் சீல்

ரூ.65 லட்சம் வரி செலுத்தாததால் சென்னை மாநகராட்சி நடவடிக்கை
பிரபல ஆல்பர்ட் தியேட்டருக்கு அதிகாரிகள் திடீர் சீல்

2021-22 நிதியாண்டிற்கான சொத்துவரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என்றும் சொத்துவரி மற்றும் கேளிக்கை வரி கட்ட தவறியவர்களுக்கு வட்டி விதிக்கப்படும் என ஏற்கெனவே சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள பிரபல ஆல்பர்ட் தியேட்டர் பல வருடங்களாக சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாமல் இருந்தது வந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஆல்பட் தியேட்டர் நிர்வாகம் வரி செலுத்தாத காரணத்தினால், திரையரங்குக்கு சீல் வைத்து ஜப்தி செய்து பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி 51 லட்சத்து 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியும், ரூ.14 லட்சம் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-ன் படி ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.