நடிகர் சூர்யா மகள் 10-ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்: சமூகவலைதளங்களில் வைரலாகும் பட்டியல்!

நடிகர் சூர்யா மகள் 10-ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்: சமூகவலைதளங்களில் வைரலாகும்  பட்டியல்!

நடிகர் சூர்யா மகள் தியா 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஜோடிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே சினிமாவில் பிஸியாக இருந்தாலும், குழந்தைகள் இருவருமே படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர்.

தியா தற்போது 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது. தமிழ் 95, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 98, சமூக அறிவியல் 95 பெற்றுள்ளார். ஆனால், இந்த மதிப்பெண் குறித்து சூர்யா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in