திகிலூட்ட வருகிறது நயன்தாராவின் ஹாரர் பட டிரெய்லர்: டிச.9 நள்ளிரவு 12 மணிக்கு வெளியீடு

திகிலூட்ட வருகிறது நயன்தாராவின் ஹாரர் பட டிரெய்லர்: டிச.9 நள்ளிரவு 12 மணிக்கு வெளியீடு

நடிகை நயன்தாரா நடிக்கும் 'கனெக்ட்' ஹாரர் படத்தின் டிரெய்லர் டிச.9-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா தற்போது 'கனெக்ட் ' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார், இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கேர், வினய் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது .

ஹாரர் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள 'கனெக்ட்' படத்தின் ஒளிபரப்பு நேரம் 95 நிமிடமாகும். எனவே. இப்படத்தில் இடைவேளை இல்லை. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது 'கனெக்ட்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் டிச. 9-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் டிச.22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு நயன்தாரா நடித்து வெளியான ஹாரர் படமான 'மாயா' மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in