`என்னைத் தவிர உங்களுக்கு வேறு யாருமில்லை’: ஆம்பரை திருமணம் செய்ய சவுதி இளைஞர் மெசேஜ்

`என்னைத் தவிர உங்களுக்கு வேறு யாருமில்லை’: ஆம்பரை திருமணம் செய்ய சவுதி இளைஞர் மெசேஜ்

ஜானி டெப்பை விட சிறந்தவன் என்றும் திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கு சவுதி இளைஞர் ஒருவர் அனுப்பியுள்ள மெசேஜ் வைரலாகி வருகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். இவர் நடிகை ஆம்பர் ஹெர்ட்-டை காதலித்து 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஆம்பர் ஹெர்ட் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், திருமணம் உறவில் வன்முறையால் பாதிக்கப்பட்டேன் என்று கூறியிருந்தார். அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் இதைத் தெரிவித்திருந்தார்.

ஆம்பர் ஹெர்ட், ஜானி டெப்
ஆம்பர் ஹெர்ட், ஜானி டெப்

ஆனால், அந்தக் கட்டுரை, தன்னையும் தன் தொழிலையும் பாதித்ததாகக் கூறி, 50 மில்லியன் டாலர் நஷ்டஈடு வேண்டும் என்று அவர் மீது அவதூறு வழக்குத் தொடுத்தார், ஜானி டெப். ஆம்பர் ஹெர்ட்-டும் 100 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குகளின் விசாரணை வெர்ஜினியாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது.

பின்னர் ஜானி டெப்புக்கு 15 மில்லியன் டாலர் நஷ்டஈடாக வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் நடந்த மூன்று வெவ்வேறு விசாரணையில், ஒரு முறை ஆம்பர் ஹெர்ட் தரப்பு வென்றது. இந்நிலையில், சவுதியை சேர்ந்த ஒருவர், ஆம்பர் ஹெர்ட்-டை திருமணம் செய்துகொள்ள முன் வந்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய சமூக வலைதளப்பக்கத்தில் வாய்ஸ் மெசேஜ் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், ’’ஆம்பர், அனைத்துக் கதவுகளும் உங்களுக்கு மூடப்பட்டுவிட்டன. உங்களைக் கவனித்துக்கொள்ள என்னைத் தவிர வேறு யாருமில்லை. பலர் உங்களை வெறுப்பதையும் கிண்டலடிப்பதையும் கவனிக்கிறேன். அதனால், உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். அல்லா இருவருக்கும் அருள் புரிவாராக. நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டப் பெண். ஆனால், மக்கள் அதைப் பாராட்டுவதில்லை. நான் அந்த வயதானவரை (ஜானி டெப்) விட சிறப்பானவன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த வாய்ஸ் மெசேஜ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in