‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ படத்துக்குத் தடை: சவுதி அரசின் முடிவுக்குக் காரணம் என்ன?

‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ படத்துக்குத் தடை: சவுதி அரசின் முடிவுக்குக் காரணம் என்ன?

சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடன் மேன்: நோ வே ஹோம்’ திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. அடுத்ததாக, ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ என்ற சூப்பர் ஹீரோ திரைப்படம் மே மாதம் 6-ம் தேதி வெளியாக இருக்கிறது.

'ஸ்பைடர்மேன்', 'ஸ்பைடர்மேன் 2', ‘ஸ்பைடர்மேன் 3’ படங்களை இயக்கிய சாம் ராய்மி இயக்கியுள்ள இந்தப் படத்தில், பெனடிக் கம்பர்பாட்ச், எலிசபெத் ஆல்சன், பெனடிக்ட் வோங் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தை தங்கள் நாட்டில் வெளியிட சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.

இந்தப் படத்தில் அமெரிக்கா சாவெஸ் என்ற புதிய கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது தன்பாலின ஈர்ப்பாளராக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சவுதி தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது. இதற்கு முன் மார்வெல் நிறுவனத்தின் ‘எட்டர்னல்ஸ்’ படத்தில் ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டர் தன்பாலின ஈர்ப்பாளராகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்திற்கும் சவுதி அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.