டயனா குரியன், நயன்தாரா ஆனது எப்படி?- அறிமுகப்படுத்திய இயக்குநர் ஆச்சரிய தகவல்!

டயனா குரியன், நயன்தாரா ஆனது எப்படி?- அறிமுகப்படுத்திய இயக்குநர் ஆச்சரிய தகவல்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த சினிமாவில், நாயகியாலும் சாதிக்க முடியும் என்பதை தன் நடிப்பால், தொடர் ஹிட்டால் நிரூபித்தவர். அதிக சம்பளம் வாங்கும் ஒரே தென்னிந்திய நடிகை அவர்தான். நயன் வாங்கும் தொகை ரூ.8.5 கோடி பிளஸ் வரி. அதாவது சுமார் ரூ.10 கோடி.

இந்தப் பெருமைகளைக் கொண்ட நடிகை நயன்தாராவை ஆரம்பத்தில் அவர் குடும்பத்தினர் நடிக்க வேண்டாம் என்று தடுத்தார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? அப்படித்தான் நடந்திருக்கிறது. 2003-ம் ஆண்டு மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு, தனது ’மனசினக்கரே’ படத்தின் கவுரி என்ற கேரக்டருக்காக புதுமுகம் தேடி வந்தார்.

அப்போது பத்திரிகை ஒன்றில் வந்த, நகை விளம்பரத்தில் இடம்பெற்ற புகைப்படத்தைப் பார்த்ததும், இவரைக் கேட்கலாமே? என்றார். அந்தப் பத்திரிகையை தொடர்பு கொண்டு ஒருவழியாக அந்தப் பெண்ணைப் பிடித்தார்கள். அவர் டயனா குரியன்!

பார்த்ததுமே போல்டான பெண்ணாக தெரிந்த அவர், நடிப்பதற்கு தயங்கினார். ஆனால் அவரை சினிமாவில் நடிக்க சம்மதிக்க வைத்தார் சத்யன் அந்திக்காடு. ஒரு வழியாக அவரும் சரி என்றார். பிறகு, நயன்தாராவின் குடும்பத்தினர் சினிமாவில் நடிக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் பேச்சை மறுக்க முடியாமல் பின்வாங்க முடிவு செய்தார். ஆனாலும் அவரைத் தூண்டி நடிக்க வைத்தவர் சத்யன் அந்திக்காடு.

அந்த டயனா குரியனை, நயன்தாரா ஆக்கியதும் அவர்தான். இந்தத் தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார், சத்யன் அந்திக்காடு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in