சன்னிலியோன் - தர்ஷாகுப்தா உடை விவகாரத்தில் சதிஷ் பேசியது சரியா? - பவித்ரா லஷ்மி!

சன்னிலியோன் - தர்ஷாகுப்தா உடை விவகாரத்தில் சதிஷ் பேசியது சரியா? - பவித்ரா லஷ்மி!

சன்னிலியோன் - தர்ஷாகுப்தா உடை விவகாரத்தில் நடிகர் சதீஷ் பேசியது குறித்து நடிகை பவித்ரா லஷ்மி தன்னுடைய கருத்தைக் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சதீஷ் ‘ஓ மை கோஸ்ட்’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை சன்னிலியோன் உடையுடன் ஒப்பிட்டு நடிகை தர்ஷா குப்தா அணிந்து வந்த உடை குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையானது. இதுகுறித்து நடிகை பவித்ரா லஷ்மி காமதேனு யூடியூப் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

இவர் நடிகர் சதீஷுடன் ‘நாய் சேகர்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் மற்றும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா இவரது நெருங்கிய தோழி. இந்த பிரச்சனை குறித்து அவர் பேசியதாவது, “என்னிடம் சதீஷ் அதுபோல இதுவரை பேசியது கிடையாது. மேலும், அந்த விவகாரத்திலும் எனக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. ஏனெனில், கடந்த இரண்டு வாரங்களாக ‘யூகி’ பட புரோமோஷன்களுக்காக சென்னை, கேரளா என மாறி மாறி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், தர்ஷா, சதிஷ் இருவரையுமே எனக்குத் தனிப்பட்ட முறையில் நன்றாகத் தெரியும். எனக்கு தெரிந்து சதிஷ் எப்போதுமே ஒருவரை புண்படுத்தும் விதமாகவோ, உங்களது சுதந்திரத்தில் தலையிடும் விதமாகவோ பேசக்கூடிய நபர் கிடையாது.

அதுபோல, தர்ஷாவுக்கு என தனிப்பட்ட முறையில் உடை அணிந்து கொள்ளும் ஸ்டைல் இருக்கிறது. இது எந்த இடத்தில் தவறாக போனது என்று தெரியவில்லை. ஆனால், இருவருமே அற்புதமான மனிதர்கள்” என்று முடித்துக் கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in