இதுவரை ஷூட்டிங் நடக்காத பகுதியில் சசிகுமார் படக் குழு!

இதுவரை ஷூட்டிங் நடக்காத பகுதியில் சசிகுமார் படக் குழு!

’அஞ்சல’ படத்தை இயக்கிய தங்கம் பா. சரவணன் அடுத்து சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார். எஸ்கேஎல்எஸ் கேலக்ஸி மால் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இ.மோகன் தயாரிக்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். ராமி ஒளிப்பதிவு செய்கிறார்.

அனன்யா நாகல்லா
அனன்யா நாகல்லா

இதில் தெலுங்கு நடிகை அனன்யா நாகல்லா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கருணாஸ், விக்னேஷ், ’அகண்டா’ நிதின் மேத்தா, பாகுபலி பிராபகர், உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆந்திராவின் கர்னூல் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் நடக்க இருக்கிறது.

வறண்ட மலைப்பகுதியான ஏகண்டி என்ற இந்தப் பகுதியில் இதுவரை தமிழ்ப் படங்களின் ஷூட்டிங் நடந்ததில்லையாம். அங்கு இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்த இருக்கிறார்கள். படத்தின் 60 சதவீத கதை இங்குதான் நடக்கிறது. தென்னிந்தியாவை இணைக்கும் டிராவல் பற்றிய கதையைக் கொண்ட இந்தப் படம் அடுத்தது என்ன என்கிற பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என்கிறது படக்குழு.

Related Stories

No stories found.