காப்புரிமை பிரச்சினையில் சிக்கிய சசிகுமார் படம்: 'நான் மிருகமாய் மாற’ என பெயர் மாற்றம்!

காப்புரிமை பிரச்சினையில் சிக்கிய சசிகுமார்  படம்: 'நான் மிருகமாய் மாற’ என பெயர் மாற்றம்!

சசிகுமார் நடித்துள்ள ’காமன் மேன்’ படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு புதிய தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா நடித்த ’கழுகு’, அசோக் செல்வன் நடித்த ’சவாலே சமாளி’, ராஜ்கிரண் நடித்த ’சிவப்பு’, கிருஷ்ணா நடித்த ’கழுகு 2’ ஆகிய படங்களை இயக்கியவர் சத்ய சிவா. இவர் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’பெல்பாட்டம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்கிடையே இப்போது சசிகுமார் நடிக்கும் ’காமன்மேன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் சசிகுமார் சவுண்ட் என்ஜினீயராக நடித்துள்ளார்.

செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹரிப்பிரியா நாயகியாக நடிக்கிறார். விக்ராந்த் வில்லனாக நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் தலைப்புக்கான காப்புரிமை தங்களிடம் உள்ளது என ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் திரைப்பட வர்த்தக சபையில் புகாரளித்தது.

சுசீந்திரனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் சார்பில் 2018-ம் ஆண்டே இந்த தலைப்பு சேம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆவணங்களும் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சசிகுமார் படத்தைத் தயாரிக்கும் செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம், 'காமன் மேன்' என்ற தலைப்பை மாற்றி, 'நான் மிருகமாய் மாற’ என்று புதிய தலைப்பை வைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in