சசிகுமார் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஆகிறது ’குற்றப்பரம்பரை’!

சசிகுமார்
சசிகுமார்

’குற்றப் பரம்பரை’ கதை, வெப் சீரிஸாக பிரமாண்டமாக உருவாகிறது.

வேல ராமமூர்த்தி எழுதிய ’குற்றப்பரம்பரை’ நாவலை திரைப்படமாக்க பல இயக்குநர்கள் போட்டிபோட்டு வந்தனர். இயக்குநர் பாலா, இந்தப் படத்தை இயக்க முன்வந்தார். அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதற்கிடையே ரத்னகுமார் எழுதியை கதையை வைத்து பாரதிராஜா, ‘குற்றப்பரம்பரை‘ கதையை இயக்குவதாக அறிவித்தார்.

பாரதிராஜா
பாரதிராஜா

இதற்கான தொடக்க விழாவையும் சொந்த ஊரில் பிரம்மாண்டமாக நடத்தினார். இதனால், பாரதிராஜாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சினையும் ஏற்பட்டது. பிறகு இருவருமே அதைக் கிடப்பில் போட்டார்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அதை வெப்சீரிஸாக தயாரிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

வேல ராமமூர்த்தி
வேல ராமமூர்த்தி

இந்நிலையில், இயக்குநர் சசிகுமார், ’குற்றப்பரம்பரை’யை கையில் எடுத்திருக்கிறார். வெப் சீரிஸாக இதை இயக்க இருக்கிறார் சசிகுமார். அவர் நடிக்க இருக்கிறாரா என்பது தெரியவில்லை. எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியின் கதை, வசனத்தில் இந்த வெப் சீரிஸ் உருவாகிறது.

சசிகுமார்
சசிகுமார்

மொத்தம் 20 எபிசோடுகளாக உருவாகும் இந்த வெப் சீரிஸை, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புக்கான லொகேஷனை படக்குழுவினர் இப்போது பார்த்து வருகின்றனர். நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in