சசிகுமார் நடிக்கும் புதிய படம் 'நந்தன்': ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின்

சசிகுமார் நடிக்கும் புதிய படம்  'நந்தன்': ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் சசிகுமார் நடிக்கும் 'நந்தன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இரா.சரவணன். இவர் நடிகர் சசிகுமாரை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். சசிகுமாரின் 'நான் மிருகமாய் மாற', 'காரி' ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் அவர் நடித்த அடுத்த படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு 'நந்தன்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்." இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் மகிழ்கிறேன். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்" என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in