‘பொன்னியின் செல்வன்' படத்துடன் வெளியாகும் ‘சர்தார்' டீஸர்: காத்திருக்கும் கார்த்தி ரசிகர்கள்

‘பொன்னியின் செல்வன்' படத்துடன் வெளியாகும் ‘சர்தார்' டீஸர்: காத்திருக்கும் கார்த்தி ரசிகர்கள்

நாளை வெளியாகவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்துடன் தியேட்டரில் 'சர்தார்' படத்தின் டீஸரும் வெளியாக இருக்கிறது. இதனால் நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, 'ஜெயம்' ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை இந்தியா முழுவதும் திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை அடுத்து நடிகர் கார்த்தியின் 'சர்தார்' திரைப்படம் அடுத்த மாதம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி நாளை படத்தின் டீஸர் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ வெளியாகும் நாளிலேயே ‘சர்தார்’ டீஸர் வெளியிடப்படுவதால், படக்குழு மட்டுமல்லாமல் கார்த்தி ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சர்தார்’ படத்தில் தந்தை-மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். படத்தில் கதாநாயகிகளாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடிக்கிறார் கார்த்தி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in