'சர்தார்' கதாநாயகிக்கு முத்தமழை: போதை நபரால் வைரலான வீடியோ

'சர்தார்' கதாநாயகிக்கு முத்தமழை: போதை நபரால் வைரலான வீடியோ

'சர்தார்' பட கதாநாயகி ராஷி கண்ணா போஸ்டருக்கு போதை ஆசாமி ஒருவர் முத்தமழை பொழியும் வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயனின் 'ப்ரின்ஸ்' திரைப்படமும், நடிகர் கார்த்தியின் 'சர்தார்' திரைப்படமும் வெளியாகியுள்ளது. அதற்காக திரையரங்குகளை சிவகார்த்திகேயன், கார்த்தி ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலைய வளாகத்தில் சர்தார் திரைப்படத்தின் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.இந்த போஸ்டரில் இப்படத்தின் கதாநாயகி ராஷி கண்ணா இடம்பெற்ற ஸ்டில் இடம் பெற்றிருந்தது. இதைக்கண்ட கைலி, சட்டை, துண்டு அணிந்த 50 வயது மதிக்கத்தக்க போதை ஆசாமி ஒருவர், மப்பு தலைக்கேறி ராஷி கண்ணா போஸ்டருக்கு முத்தமழை பொழிய ஆரம்பித்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் தலையடித்துக் கொண்டு சென்றனர். ஆனால், இந்த காட்சியை செல்போனில் படம் பிடித்த ஒருவர், சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in