வெளியானது ’தி லெஜண்ட்’ படத்தின் மோஷன் போஸ்டர்

வெளியானது ’தி லெஜண்ட்’ படத்தின் மோஷன் போஸ்டர்

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் ஹீரோவாக நடிக்கும் `தி லெஜண்ட்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கி வருகின்றனர். இந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறிமுகமாகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஊர்வசி ரவுதலா, பிரபு, விஜயகுமார், நாசர், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர்.

சரவணன்
சரவணன்

நடிகர் விவேக் நடித்துள்ள கடைசி படம் இது. சயின்ஸ் பிக்சன் படமான இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்துக்கு ’த லெஜண்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மோஷன் போஸ்டரில் ஒரு குடையை வைத்தபடி மிரட்டும் லுக்கில் போஸ் தருகிறார் சரவணன். ஆக்‌ஷன் காட்சிக்கான பார்வை அது. இதையடுத்து சமூக வலைதளங்களில் இந்த மோஷன் போஸ்டர் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in