’தளபதி 66’ படத்தில் விஜய்க்கு தந்தையாகும் பிரபல நடிகர்!

விஜய், ராஷ்மிகா மந்தனா
விஜய், ராஷ்மிகா மந்தனா

’விஜய் 66’ படத்தில் அவர் தந்தையாக முன்னணி நடிகர் நடிக்கிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ படம், கடந்த 13-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனத்தைப்பெற்றுள்ள இந்தப் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இவர் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான, ’தோழா’ படத்தை இயக்கியவர்.

சரத்குமார், விஜய்
சரத்குமார், விஜய்

’விஜய் 66’ படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் விஜய்க்கு தந்தையாக நடிக்கிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in