கேங்ஸ்டர் ஆனார் ’அம்மா’ சரண்யா !

கேங்ஸ்டர் ஆனார் ’அம்மா’ சரண்யா !

நடிகை சரண்யா பொன்வண்ணன் நடிக்கும் படத்துக்கு, கேங்ஸ்டர் கிரானி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன், முதன்முறையாக கேங்ஸ்டர் படத்தில் நடிக்கிறார். படத்தை விஷ்ணு ராமகிருஷ்ணன் இயக்குகிறார். இதில், ராஜ்வர்மா, அம்ஜத் கான் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. நடிகர் ஜீவா, இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இந்தப் படத்திற்கு 'கேங்ஸ்டர் கிரானி' என்று பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் சரண்யா பொன்வண்ணன் இயந்திர துப்பாக்கியுடன் மிரட்டும் லுக்கில் இருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் ஜீவா, 'சரண்யா பொன்வண்ணன் அதிரடியாக திரும்பி வந்திருக்கிறார். இந்த முறை சாதாரண அம்மாவாக அல்லாமல், அசாதாரண கேங்ஸ்டர் பாட்டியாக வருகிறார்' என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in