பிரபல சந்தூர் இசைக்கலைஞர் காலமானார்: பிரதமர் இரங்கல்

பிரபல சந்தூர் இசைக்கலைஞர் காலமானார்: பிரதமர் இரங்கல்

பிரபல சந்தூர் இசைக் கலைஞரும் இசை அமைப்பாளருமான ஷிவ்குமார் சர்மா காலமானார். அவருக்கு வயது 84.

ஜம்முவில் பிறந்த ஷிவ் குமார் சர்மா, சந்தூர் என்கிற நாட்டுப்புற இசைக்கருவியை வாசிப்பதில் சிறந்து விளங்கியவர். சந்தூரை, பிரபலமான இசைக் கருவியாக மாற்றியவர் இவர். 1956-ல் சாந்தாராமின் ’ஜனக் ஜனக் பாயல் பாஜே’ என்ற படத்தில் ஒரு காட்சிக்கு பின்னணி இசையமைத்த இவர், ஹரிபிரசாத்துடன் இணைந்து சில்சிலா, ஃபால்ஸ், லம்ஹே, சாந்தினி, தர் போன்ற இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்று வந்த இவர் சிறுநீரகப் பிரச்சினையாக கடந்த ஆறு மாதமாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சையும் எடுத்து வந்த இவர் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.

பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ள இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தெரிவித்துள்ள இரங்கலில், பண்டிட் ஷிவ் குமாரின் மறைவால் கலை உலகம் நலிவடைந்துள்ளது. சந்தூர் இசைக்கருவியை உலகளவில் பிரபலமாக்கியவர் அவர். அவருடனான என் தொடர்புகளை அன்புடன் நினைவில் கொள்கிறேன். அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in