‘குண்டுமல்லி’ பாடலுக்காக ஜோடி சேரும் சாந்தனு - மஹிமா நம்பியார்

‘குண்டுமல்லி’ பாடலுக்காக ஜோடி சேரும் சாந்தனு - மஹிமா நம்பியார்

இணையதள வசதி பெருகிவிட்ட இக்காலத்தில் திரைப்படப் பாடல்களுக்கு இணையாகத் தனிப்பாடல்களும் ( இண்டிபெண்டன்ட் சாங்க்ஸ்/ஆல்பம்ஸ்) பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன. சமீபத்தில் வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’, ‘ஜோர்தாலே’ போன்ற பாடல்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்றுவருகின்றன இப்பாடல்கள்.

யுடியூபில் வெளியாகும் இவ்வகை பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் வெள்ளித்திரை நட்சத்திரங்களும் இவ்வகை தனிப்பாடல்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.

அவ்வகையில், சாந்தனு மற்றும் மகிமா நம்பியார் இருவரும் ‘குண்டுமல்லி’ என்கிற தனிப்பாடல் ஒன்றில் ஜோடியாக நடித்துள்ளனர்.

நடிகராக இருந்து விளம்பரப்பட இருக்குனராக மாறியுள்ள ஆதவ் கண்ணதாசன் இந்தப் பாடலை இயக்கியுள்ளார். ஜெரார்டு ஃபீளிஸ் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். திருமணத்திற்குப் பெண் பார்த்துவிட்டுச் செல்பவர்கள் பெண்ணை பிடித்திருக்கிறது என்றால் பூ வைத்து விட்டுச் செல்வது வழக்கம். அப்படி பூ வைக்கிற விழாவின் பின்னணியில் இந்த பாடலை உருவாக்கியுள்ளோம் எனக் கூறியுள்ளார் இயக்குநர் ஆதவ் கண்ணதாசன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in