தமிழ், கன்னடத்தில் சந்தானம் நடிக்கும் 'கிக்': டிரெய்லர் வெளியீடு

தமிழ், கன்னடத்தில் சந்தானம் நடிக்கும் 'கிக்': டிரெய்லர் வெளியீடு

நடிகர் சந்தானம் நடிக்கும் 'கிக்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல கன்னட திரைப்பட இயக்குநரான பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கிக்' படத்தில் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தின் தன்யா ஹோப், ராகினி திவேதி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்க சுதாகர்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளான நேற்று 'கிக்' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in