சந்தானம், தன்யா ஹோப் பட ஷூட்டிங் தொடக்கம்

சந்தானம், தன்யா ஹோப் பட ஷூட்டிங் தொடக்கம்

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் பெங்களூருவில் இன்று தொடங்கியுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை பெங்களூருவில் இன்று தொடங்கியுள்ளது. இதில் அவர் ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். இது சந்தானம் பாணியில் அமையும் காமெடி படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். நவீன்ராஜ் தயாரிக்கிறார். தமிழ், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு அர்ஜுன் ஜன்யா இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் தன்யா ஹோப், தமிழில், அருண் விஜய் ஜோடியாக `தடம்' படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ஜீவா, மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் `கோல்மால்' படத்தில் நடித்துள்ளார். காமெடி படமான இதன் ஷூட்டிங் மொரிசியஷில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து சந்தானம் ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in