’கல் நாயக்’ ரீமேக்கில் ரண்வீர் சிங் வேண்டாம்: காமெடி காரணம் சொன்ன சஞ்சய் தத்!

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தான் நடித்த ‘கல் நாயக்’ திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டால் அதில், நடிகர் ரண்வீர் சிங் நடிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் பாலிவுட் திரையுலகில் சிரிப்பலையை ஏற்படுத்தியிருக்கிறது.

சுபாஷ் கய் இயக்கத்தில் சஞ்சய் தத், ஜாக்கி ஷெராஃப், மாதுரி தீட்சித் போன்றோர் நடிப்பில் 1993-ல் வெளியான ‘கல் நாயக்’ மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எதிர்நாயகன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தின் நடிப்பு அவருக்குப் பெரும் புகழ் சேர்த்தது. பாலிவுட் திரையுலகின் மிக முக்கியமான நடிகரான சஞ்சய் தத், கன்னடத்தில் உருவான பான் இந்தியா படமான ‘கேஜிஎஃப்-2’ படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது துருவா சர்ஜா நடிக்கும் கன்னடப் படமான ‘கேடி- தி டெவில்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் சஞ்சய் தத், முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்திப் படங்களிலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில், அமேசான் மினிடிவி தளத்தில் ஒளிபரப்பாகும் ‘கேஸ் தோ பன்தா ஹை’ எனும் நகைச்சுவை நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடில் சஞ்சய் தத் கலந்துகொள்கிறார்.

இதற்கான முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு நகைச்சுவையாக அவர் பதிலளித்திருக்கிறார். அதில், ‘கல் நாயக்’ படத்தை ரீமேக் செய்தால் யார் அதில் சஞ்சய் தத் பாத்திரத்தில் நடிப்பது பொருத்தமாக இருக்கும் எனும் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு ரண்வீர் சிங், ரண்பீர் கபூர், விக்கி கவுஷல் ஆகிய மூன்று பேரின் பெயர்களையும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவரான நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் சொல்கிறார்.

ரண்வீர் சிங்
ரண்வீர் சிங்

ர்அப்போது, “ரண்வீர் சிங் வேண்டாம். அவர் இப்போதெல்லாம் ஆடை அணிவதில்லை” என்று பதிலளித்திருக்கிறார். இந்த முன்னோட்டம் தற்போது வைரலாகியிருக்கிறது.

நடிகர் ரண்வீர் சிங், நிர்வாணமாகப் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in