
`தளபதி 67’-ல் நடிகர் விஜய்க்கு வில்லனாகிறார் சஞ்சய் தத்.
’வாரிசு’ பட வெளியீட்டிற்கு பிறகு நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் படம் குறித்தான அறிவிப்பிற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்தப் படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிப்பதுடன் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதை தங்களுடைய சமீபத்திய பேட்டியில் உறுதி செய்தனர். இந்த நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு உறுதி செய்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தை சஞ்சய் தத் நடித்தால்தான் சரியாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் நம்புவதால் அவர் இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம். ’தளபதி 67’ துவக்க நாட்களுக்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்து காஷ்மீரில் படப்பிடிப்பு முடித்துவிட்டு பொங்கலுக்கு அடுத்து மீண்டும் சில நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.