
நடிகர் சஞ்சய் தத் தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் 65-வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ராம் பொதினேனியின் அடுத்த படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ மற்றும் நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் ஆகியவை வெளியாகியுள்ளன. இதில் ‘டபுஸ் ஐஸ்மார்ட்’ படம் பூரி ஜெகன்னாத்தின் ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் சீக்வல்.
இதில் ‘பிக் புல்’ என சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தை படக்குழு இன்று அவரது பிறந்தநாளில் போஸ்டர் வெளியிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் சஞ்சய் தத் புகைபிடித்தபடி உள்ளார்.
அதேபோல, ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். இதில் அவரது பெயர் ஆண்டனி தாஸ் என அவரது பிறந்தநாளுக்காக கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளது படக்குழு. இதிலும் சஞ்சய் தத்தின் அறிமுகக் காட்சியிலேயே அவர் புகைபிடித்தபடி வருகிறார். இதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"இதற்கு முன்பே நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து மீண்டு வந்தவர் சஞ்சய் தத். அப்படி இருக்கும் போது எதற்காக புகைப்பிடிக்கும் இது போன்ற காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும்? அதிலும் அவரது பிறந்தநாளன்றே, இது போன்ற போஸ்டர்கள் வெளியாவது அதிருப்தி அடைய செய்துள்ளது" என நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.