#தளபதி69 விஜய் படத்தின் இயக்குநர் இவரா?

சந்தீப் ரெட்டி, விஜய் தேவரகொண்டா உடன்
சந்தீப் ரெட்டி, விஜய் தேவரகொண்டா உடன்

விஜய் நடிக்கும் ’#தளபதி69’ திரைப்படத்தை ’அர்ஜூன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கப்போவதாக தகவல்கள் வலம் வருகின்றன.

’வாரிசு’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான ’லியோ’ படத்துக்கான படப்பிடிப்பில் நடிகர் விஜய் மும்முரமாக உள்ளார். ’லியோ’ படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே அவரது அடுத்த திரைப்படத்துக்கான தகவல்கள் அலையடித்தன. இயக்குநர் அட்லீ உடன் விஜய் மீண்டும் கூட்டு சேரப்போவதாகவும், பாலிவுட் பாஷா ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை அடுத்து அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் சொல்லப்பட்டன.

இதற்கிடையே வாரிசு திரைப்படம் தெலுங்கிலும் வெளியானதை அடுத்து, விஜய்க்கு அங்கேயும் வரவேற்பு எழுந்துள்ளது. அதற்கேற்ப கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமா சந்தைகளை குறிவைத்து இன்னொரு படத்துக்கு தயாராக விஜய் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கேற்ப தெலுங்கு இயக்குநர் ஒருவரை அதற்கு பரிசீலிப்பதாகவும் தகவல் வெளியாயின.

இந்த வகையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படம் வாயிலாக தேசிய அளவில் பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் விஜய் தரப்பின் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்பட்டது. ’அர்ஜூன் ரெட்டி’ அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து சந்தீப் ரெட்டியை பாலிவுட் அரவணைத்துக் கொண்டது. அர்ஜூன் ரெட்டியின் இந்தி ரீமேக் படமாக, ஷாகித் கபூர் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் ’கபீர் சிங்’ இயக்கினார். தொடர்ந்து ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா நடிப்பிலான ’அனிமல்’ திரைப்படத்தை தற்போது சந்தீப் ரெட்டி அங்கு உருவாக்கி வருகிறார்.

இவற்றின் தொடர்ச்சியாக, பிரபாஸ் நடிப்பிலான பான் இந்தியா திரைப்படமாக ’ஸ்பிரிட்’ எனும் மெகா பட்ஜெட் படைப்பை உருவாக்க இருக்கிறார். இதனை அடுத்தே விஜய் நடிப்பிலான படத்திட்டத்தில் சந்தீப் ரெட்டி இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் அட்லீ உடனான படத்தை முடித்த பிறகே சந்தீப் ரெட்டி உடன் விஜய் கைகோப்பார் என தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டால் #தளபதி69 திரைப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி என்பது முடிவாகும். மேலும் அந்த திரைப்படம் விஜய்க்கு தெலுங்கில் அதிகரித்து வரும் ரசிகர்களை குறிவைத்தும் உருவாகும் எனலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in