`கடவுள் மட்டுமே மன்னிக்கிறார்’: மிரட்டும் சந்தீப் கிஷனின் `மைக்கேல்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

`கடவுள் மட்டுமே மன்னிக்கிறார்’: மிரட்டும் சந்தீப் கிஷனின் `மைக்கேல்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சந்தீப் கிஷன், பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படம், ’மைக்கேல்’. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படம் பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. படத்தில் சந்தீப் கிஷனுடன் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.

நாயகியாக திவ்யன்ஷா கவுசிக் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 'கடவுள் மட்டுமே மன்னிக்கிறார்' என்ற வாசகம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் சந்தீப் கிஷனின் தோற்றம் மிரட்டுகிறது. சிக்ஸ் பேக் , கையில் ஆயுதம், நீண்ட மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரம்... ஆகியவை இது பிரம்மாண்ட ஆக் ஷன் படம் என்பதை காட்டுகிறது.

Related Stories

No stories found.