
’மைக்கேல்’ படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி இருக்கிறது.
நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான 'மைக்கேல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் 'மைக்கேல்'. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், திவ்யன்ஷா கௌஷிக், வரலட்சுமி சரத்குமார், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
திரிபுரனேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதா மணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து வசனம் எழுதியிருக்கும் இந்த திரைப்படத்தை கரண் சி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்களின் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் பரத் சவுத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை நாராயணதாஸ் கே நரங் வழங்குகிறார். பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஒரு அழகான காதல் கதையை ஸ்டைலிஷான காட்சி அமைப்புகளுடன் ரத்தம் தோய்ந்த ஆக்சன் என்டர்டெய்னருடன் முன்னோட்டம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.