தனுஷை அடுத்து மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் சம்யுக்தா

சம்யுக்தா
சம்யுக்தா

தனுஷின் வாத்தி படத்தில் நடித்து வரும் சம்யுக்தா மேனன், அடுத்து மகேஷ் பாபு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

மலையாளத்தில் பாப்கார்ன், தீவண்டி, உயரே, கல்கி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சம்யுக்தா மேனன். தமிழில் ’களரி’ படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ’ஜூலை காற்றில்’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இப்போது பிருத்விராஜின் ’கடுவா’ படத்தில் நடித்து வரும் சம்யுக்தா, தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ’வாத்தி’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ’பீம்லா நாயக்’ படத்தில், ராணா ஜோடியாக நடித்து வருகிறார்.

சம்யுக்தா மேனன்
சம்யுக்தா மேனன்

இதையடுத்து, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க இருக்கிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ’அலா வைகுந்தபுரம்லோ’ படத்தை அடுத்து, மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். ’கலீஜா’ படத்துக்குப் பிறகு இருவரும் இணையும் படம் இது. இதில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்க சம்யுக்தா மேனனிடம் பேசி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in