பிரபல நடிகையின் தலையிலிருந்து கொட்டிய ரத்தம்: டூப் போடாமல் நடித்த சண்டைக் காட்சியில் விபரீதம்

பிரபல நடிகையின் தலையிலிருந்து கொட்டிய ரத்தம்: டூப் போடாமல் நடித்த சண்டைக் காட்சியில் விபரீதம்

படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின்போது நடந்த விபத்தில் பிரபல நடிகை படுகாயமடைந்தார்.

தமிழில், கோமாளி, வாட்ச்மேன், மன்மதலீலை, தேள் உள்பட சில படங்களில் நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. கன்னட நடிகையான இவர், அங்கு, கிரிக்பார்ட்டி, காலேஜ் குமார் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த இவர், கன்னட இயக்குநர் அபிஷேக் வசந்த் இயக்கும் ’கிரீம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சம்வர்தினி புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடந்து வந்தது.

அப்போது சண்டைக் காட்சியில் சம்யுக்தா ஹெக்டே நடித்தார். ரிஸ்க்கான சண்டைக் காட்சி என்பதால், இயக்குநர் டூப் போடலாம் என்று கூறினார். தற்காப்பு கலைப் பயின்றிருப்பதால் சரியாக செய்துவிடுவேன் என்று சம்யுக்தா கூறினார். இதையடுத்து சண்டைக் காட்சியில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருடைய தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார். அங்கு ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்தச் சம்பவம் காரணமாக, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in