தெலுங்கில் படம் இயக்குகிறார் சமுத்திரகனி

சமுத்திரகனி
சமுத்திரகனி

பவன் கல்யாண் நடிக்கும் தெலுங்கு படத்தை சமுத்திரகனி இயக்க இருக்கிறார்.

சமுத்திரகனி நடித்து இயக்கிய திரைப்படம், ’விநோதய சித்தம்’. தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். அபிராமி ராமநாதன் தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த வருடம் அக்டோபர் 13-ம் தேதி, ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

சத்யா இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். தமிழில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் சமுத்திரகனி, இந்தப் படத்தை அங்கும் இயக்குகிறார். இவர், ஏற்கெனவே தெலுங்கில், நாடோடிகள் படத்தின் ரீமேக்கை இயக்கி இருந்தார்.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

சமுத்திரகனி நடித்த கேரக்டரில் பவன் கல்யாண் நடிக்க இருக்கிறார். அவர் மருமகன் சாய் தரம் தேஜ் அவருடன் நடிக்க இருக்கிறார். தெலுங்குக்காக கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோவுடன் இணைந்து பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in