வெறிச்சோடிய தியேட்டர்கள்... ரத்து செய்யப்பட்ட காட்சிகள்: அடுத்தடுத்த தோல்வியால் பிரபல ஹீரோ சோகம்!

வெறிச்சோடிய தியேட்டர்கள்... ரத்து செய்யப்பட்ட காட்சிகள்: அடுத்தடுத்த தோல்வியால் பிரபல ஹீரோ சோகம்!

பிரபல ஹீரோ நடித்த படத்துக்கு ரசிகர்கள் வராததால், பல பகுதிகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரபல பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமார். தமிழில் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். இவர் நடித்து ’பச்சன் பாண்டே’ என்ற படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இது தமிழில் வெளியான ’ஜிகிர்தண்டா’ படத்தின் ரீமேக். 180 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 68 கோடியை மட்டுமே வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அக்‌ஷய் நடித்து, கடந்த 3-ம் தேதி வெளியான படம், ’சாம்ராட் பிருத்விராஜ்’. வரலாற்றுக் கதையை கொண்ட இந்தப் படம், பான் இந்தியா படங்களான கமல்ஹாசனின் விக்ரம், தெலுங்கில் உருவான மேஜர் ஆகிய படங்களுடன் ரிலீஸ் ஆனது.

250 கோடியில் உருவான இந்தப் படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியிருந்தார். உலக அழகி மனுஷி சில்லார் ஹீரோயினாக அறிமுகமானார். சோனு சூட், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்திருந்தனர். இருந்தும் வெறும் 55 கோடியை மட்டுமே இந்தப் படம் வசூலித்துள்ளது.

இந்நிலையில், பல பகுதிகளில் ரசிகர்கள் வராததால், தியேட்டர்களில் இந்தப் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் கமல்ஹாசன் விக்ரம், மேஜர் படங்கள் வசூல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அக்‌ஷய் குமாரின் அடுத்தடுத்தப் படங்கள் தோல்வியை சந்தித்து வருவதால் அவர் அதிர்ச்சியில் உள்ளார். ஏற்கெனவே கங்கனா நடித்த ’தாக்கத்’ படம், ரிலீஸ் ஆன எட்டாவது நாளில் வெறும் ரூ.4,400 மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in