சமந்தாவின் ‘யசோதா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமந்தாவின் ‘யசோதா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது.

சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம், 'யசோதா'. ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கும் இந்தப் படத்தை ஹரி-ஹரீஷ் இணைந்து இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். மணிசர்மா இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சசிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

த்ரில்லர் கதையை கொண்ட இப்படத்துக்காக, 3 கோடி ரூபாய் செலவில் நட்சத்திர ஓட்டல் செட் ஒன்று ஹைதராபாத் அருகே அமைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதால் இந்த செட் அமைக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் யான்னிக் பென், சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.

``ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். ஆகஸ்ட் 12-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. மே மாத இறுதியில் ஷூட்டிங் முடிவடையும். கொடைக்கானலில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது'' என்றார் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in