இத்தனை நாட்கள் ரசிகர்கள் காட்டி வரும் அன்புக்கும் நன்றி: நடிகை சமந்தா திடீர் ட்விட்

நடிகை சமந்தா
நடிகை சமந்தாஇத்தனை நாட்கள் ரசிகர்கள் காட்டி வரும் அன்புக்கும் நன்றி: நடிகை சமந்தா திடீர் ட்விட்

ரசிகர்களின் அன்புக்கு நடிகை சமந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் நடிகை சமந்தா மிகவும் ஆக்டிவாக இருப்பார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரங்கள் செய்வது, ஃபோட்டோஷூட், படம் தொடர்பான பதிவுகள், தன் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் என பலவற்றை பகிர்ந்து வருகிறார் சமந்தா.

ஆனால், மையோசிடிஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக எந்தவிதமான பதிவும் பகிராமல் இருந்தார் சமந்தா. இப்போது மீண்டும் பழையபடி ஆக்டிவாக வலம் வரத் தொடங்கி இருக்கிறார் சமந்தா.

சமந்தா
சமந்தாஇத்தனை நாட்கள் ரசிகர்கள் காட்டி வரும் அன்புக்கும் நன்றி: நடிகை சமந்தா திடீர் ட்விட்

சமந்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 25 மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். இதற்கு நன்றி தெரிவித்தும் இத்தனை நாட்கள் ரசிகர்கள் காட்டி வரும் அன்புக்கும் நன்றி என சமந்தா தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் தனது நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே, இன்னொரு பக்கம் படப்பிடிப்பிலும் பங்கேற்று வருகிறார் சமந்தா. ‘சிட்டாடல்’ வெப்சீரிஸ்க்காக கடுமையான ஆக்‌ஷன் பயிற்சியிலும் பங்கேற்று வருகிறார். விரைவில் விஜய்தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படப்பிடிப்பிலும் இணைய இருக்கிறார் சமந்தா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in