200 மில்லியனை கடந்தது சமந்தா பாடல்!

200 மில்லியனை கடந்தது சமந்தா பாடல்!

’புஷ்பா’ படத்தில் சமந்தா ஆடிய பாடல், 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்து வெளியான படம், ’புஷ்பா’. பான் இந்தியா படமாக, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். பகத் பாசில், சுனில், தனஞ்செயா, அஜய் கோஷ், ராவ் ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நடிகை சமந்தா ஆடிய, 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடல் வட இந்தியாவிலும் புகழ்பெற்றுள்ளது.

இந்நிலையில், இதன் தெலுங்கு பதிப்புப் பாடலான, ’ஊ அண்டவா மாவா’ யூடியூப் தளத்தில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது. இந்தப் பாடலை தெலுங்கில் இந்திரவதி சவுகான் பாடியுள்ளார். சந்திரபோஸ் பாடல் எழுதியுள்ளார்.

இதில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான ’ஸ்ரீவள்ளி’ ஏற்கெனவே நூறு மில்லியனை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. படக்குழுவினர், இந்தப் படத்தின் அடுத்தப் பாகத்துக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.