சமந்தா நடித்த 'சாகுந்தலம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘சாகுந்தலம்’  திரைப்படம்
‘சாகுந்தலம்’ திரைப்படம்சமந்தா நடித்த 'சாகுந்தலம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ திரைப்படம் ஏப்.14-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா, தேவ்மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘சாகுந்தலம்’. காளிதாசன் எழுதிய புராணக் கதையான சாகுந்தலையின் காதலை மையப்படுத்தி குணசேகர் இயக்கி இருக்கும் படம்தான் ‘சாகுந்தலம்’.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா வெளியீடாக இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. பின்பு முழுமையடையாத டப்பிங் மற்றும் 3டி பணிகள் காரணமாக பிப்.17-ல் படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த படத்தின் நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்றது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இதனையடுத்து இந்தப் படத்தின் வெளியீடு தொழில்நுட்ப பணிகள் நிறைவு பெறாத காரணத்தால் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஏப்.14-ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in