5 மொழிகளில் வெளியானது சமந்தாவின் புதிய பட டீசர்!

5 மொழிகளில் வெளியானது சமந்தாவின் புதிய பட டீசர்!

நடிகை சமந்தா 5 மொழிகளில் நடிக்கும் 'யசோதா' படத்தின் டீசர் இன்று வெளியானது.

நடிகை சமந்தா நடிப்பில் 'யசோதா' என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு,இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகுகிறது.

இப்படத்தை ஹரி-ஹரிஷ் ஆகியோர் இயக்குகின்றனர். படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட நடித்துள்ளனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in