விவாகரத்துக்கு முதலில் விண்ணப்பித்தது சமந்தாதான்: நாகார்ஜுனா

சமந்தா, நாக சைதன்யா, நாகார்ஜுனா
சமந்தா, நாக சைதன்யா, நாகார்ஜுனா

‘நடிகை சமந்தாதான் விவாகரத்துக்கு முதலில் விண்ணப்பித்தார்’ என்று நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி திடீரென தங்கள் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் பிரிந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் இருவரும் அதற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை.

சமீபத்தில் பேட்டியளித்த நாக சைதன்யா, “விவாகரத்து அவருக்கு மகிழ்ச்சி என்றால் தனக்கும்தான்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது நாக சைதன்யாவின் தந்தை நடிகர் நாகார்ஜுனா, இவர்கள் விவாகரத்து பற்றிப் பேசியுள்ளார்.

நாக சைதன்யா, நாகார்ஜுனா, சமந்தா
நாக சைதன்யா, நாகார்ஜுனா, சமந்தா

அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “விவாகரத்துக்கு முதலில் விண்ணப்பித்தது சமந்தாதான்” என்று தெரிவித்துள்ளார். அவர் முடிவை நாக சைதன்யா ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால், தான் என்ன நினைப்பேன், குடும்பத்தின் பெயர் என்னவாகும் என்று நாகை சைதன்யா கவலைப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அவர்கள் திருமண வாழ்க்கையில் 4 வருடங்கள் எந்த பிரச்சினையும் வரவில்லை. இந்த முடிவு எப்படி வந்தது என்று தெரியவில்லை. 2021-ம் ஆண்டின் புத்தாண்டை இருவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். அவர்களுக்கிடையில் எதனால் பிரச்சினைகள் எழுந்தது என குழப்பமாக இருந்ததாகவும் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா சமீபத்தில் நாக சைதன்யாவை பிரிவதாக கூறியிருந்தப் பதிவை, சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in