செம காதல் பாட்டு... தெறிக்க விட்ட சமந்தா... வைரலாகும் ‘குஷி’ டிரெய்லர்!

சமந்தா
சமந்தா’குஷி’ டிரெய்லரில்...

நடிகர்கள் விஜய்தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் ‘குஷி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் விஜய்தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக இது உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு காஷ்மீர், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடந்தது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா சமந்தாவை முதன் முறையாக காஷ்மீரில் ‘பேகம்’மாக சந்திப்பது போலவும், பிறகு சமந்தா தான் பேகம் இல்லை பிராமின் என சொல்கிறார்.

இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கும் இவர்களது திருமண வாழ்க்கை சண்டையாகவே செல்கிறது. இதனூடே இருக்கும் இவர்களது காதல் என படத்தின் கதையாக இந்த டிரெய்லர் விவரிக்கிறது. இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, வெண்ணிலா கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் இருந்து வெளியான ‘என் ரோஜா நுவ்வே’, ‘குஷி’ ஆகிய பாடல்கள் இணையத்தில் வரவேற்பைப் பெற்ற நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in