விசாகப்பட்டினத்தில் சமந்தாவின் 'குஷி'!

விசாகப்பட்டினத்தில் சமந்தாவின் 'குஷி'!

சமந்தா நடிக்கும் ’குஷி’ படத்தின் அடுத்த ஷெட்யூல் விசாகப்பட்டினத்தில் தொடங்க இருக்கிறது.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் படம், ’குஷி’. தெலுங்கு இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கும் இந்தப் படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் டிசம்பர் 23-ம் தேதி இந்தப் படம் உருவாகிறது. ஜி முரளி ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ’ஹிருதயம்’ ஹிஷம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதத்துக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் இரண்டு கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இதன் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்க இருக்கிறது. அங்கு கடற்கரை அருகே ரொமான்டிக் பாடல் காட்சியை படமாக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in