சமந்தா அதிரடி முடிவு: நாக சைதன்யா கூல்!

சமந்தா அதிரடி முடிவு: நாக சைதன்யா கூல்!

நடிகை சமந்தா திடீரென அப்படி செய்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதில் தமிழ், தெலுங்கு திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்கள் காதல் திருமணம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

சமந்தா, நாக சைதன்யா
சமந்தா, நாக சைதன்யா

இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் திடீரென திருமணப் பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்தன. இதையடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்த திருமணம் மற்றும் நாக சைதன்யாவுடன் இருந்த புகைப்படங்களை நீக்கினார் சமந்தா. கடந்த சில நாட்களுக்கு முன், திருமணத்தின்போது தனக்கு கொடுக்கப்பட்ட புடவையை, நாக சைதன்யா அம்மாவிடம் திருப்பி கொடுத்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாக சைதன்யாவை இப்போது ’அன்பாலோ’ செய்திருக்கிறார் சமந்தா. அவர் இப்படியொரு அதிரடி முடிவை எடுத்தாலும் கூல் நாக சைதன்யா, அவரை பின் தொடர்வதை நிறுத்தவில்லை. சமந்தாவுடனான புகைப்படங்களையும் அவர் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in