
புதிதாகத் தொடங்க இருக்கும் வெப் தொடருக்காக நடிகை சமந்தா மும்பையில் பயிற்சி பெற்றுவருகிறார்.
விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, அடுத்து, பான் இந்தியா படமான ’சகுந்தலம்’ படத்தையும் முடித்துவிட்டார். ’யசோதா’ என்ற படத்திலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் ’த பேமிலிமேன் 2’ வெப் தொடருக்குப் பிறகு மற்றொரு தொடரில் சமந்தா நடிக்கிறார்.
’த பேமிலிமேன் 2’ தொடர் அவருக்கு இந்தியா முழுவதும் புகழைப் பெற்று தந்தது. அந்தத் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே புதிய தொடரையும் இயக்குகின்றனர். ’சிட்டாடல்’ என்ற பிரபலமான அமெரிக்க வெப்தொடரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தத் தொடரையும் அமேசான் பிரைம் தயாரிக்கிறது.
இதில் பிரபல இந்தி நடிகர் வருண் தாவன், சமந்தா உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் நடிப்பவர்களுக்கு மும்பையில் ஆக்ஷன் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் நடிகை சமந்தா கலந்துகொண்டிருக்கிறார்.