சித்ரவதை, கருக்கலைப்பு; சமந்தாவை கொடுமைப்படுத்திய நாக சைதன்யா: பிரபல சினிமா விமர்சகர் அதிர்ச்சி தகவல்

சமந்தா- நாக சைதன்யா
சமந்தா- நாக சைதன்யாசித்ரவதை, கருக்கலைப்பு; சமந்தாவை கொடுமைப்படுத்திய நாக சைதன்யா: பிரபல சினிமா விமர்சகர் அதிர்ச்சி தகவல்

"நாக சைதன்யா ஒரு மோசமான கணவர். அவர் சமந்தாவை சித்ரவதை செய்தார். இதனால் கர்ப்பமாக இருந்த சமந்தா கருக்கலைப்பு செய்து கொண்டார்" பிரபல சினிமா விமர்சகர் உமைர் சந்து சர்ச்சை ஏற்படுத்தும் ட்வீட் போட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதனால் ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் தசை அழற்சி நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நாக சைதன்யா- சமந்தா விவாகரத்திற்கு பலரும் பலவித கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் உமைர் சந்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் ட்வீட் ஒன்று போட்டுள்ளார். அதில், "நாக சைதன்யா ஒரு மோசமான கணவர். அவர் சமந்தாவை சித்ரவதை செய்தார். இதனால் கர்ப்பமாக இருந்த சமந்தா கருக்கலைப்பு செய்து கொண்டார்" என்று கூறியுள்ளார். உமைர் சந்துவின் இந்த ட்வீட் நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in