சமந்தாவை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தும் பிரபல இயக்குநர்: இவர்தான் ஹீரோ?

சமந்தாவை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தும் பிரபல இயக்குநர்: இவர்தான் ஹீரோ?

நடிகை சமந்தாவை பிரபல இயக்குநர் பாலிவுட்டில் அறிமுகப் படுத்த இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை சமந்தா, ஃபேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்ததன் மூலம் இந்தியிலும் பிரபலமானார். ’புஷ்பா’ படத்தில் அவர் ஆடிய பாடலும் இந்தி ரசிகர்களிடையே அவருக்கு புகழைப் பெற்று தந்துள்ளது. இதையடுத்து அவர் இந்தி படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப் படத்தை அவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இதனால் அவருடன் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்றுள்ளார்.

இதற்கிடையே கரண் ஜோஹரின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான, தர்மா புரொடக்‌ஷன்ஸுடன் நடிகை சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார் என்றும் அக்‌ஷய் குமார் ஜோடியாக அவர் இந்தியில் அறிமுகமாக இருப்பதாகவும் தற்போது லண்டனில் இருக்கும் கரண் ஜோஹர், மும்பை திரும்பியதும் இந்தப் படம் பற்றி அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

சமந்தா, கரண் ஜோஹர்
சமந்தா, கரண் ஜோஹர்

நடிகை சமந்தா, இப்போது விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி ’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. குணசேகர் இயக்கியுள்ள ‘சாகுந்தலம்’ என்ற படத்திலும் சமந்தா நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே ஹரி - ஹரீஷ் இயக்கும் ’யசோதா’ என்ற த்ரில்லர் படத்திலும் சமந்தா நடித்துள்ளார். அடுத்து டாப்ஸி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in