ஹாலிவுட் பயிற்சியாளருடன் நடிகை சமந்தா சண்டை பயிற்சி: வைரலாகும் வீடியோ

ஹாலிவுட் பயிற்சியாளருடன் நடிகை சமந்தா சண்டை பயிற்சி: வைரலாகும் வீடியோ

'யசோதா' படத்திற்காக நடிகை சமந்தா ஹாலிவுட் சண்டை பயிற்சியாளரிடம் பயிற்சி பெறும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா நடித்துள்ள ‘யசோதா’ திரைப்படம் இந்த மாதம் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான 'யசோதா' படத்தில் டிரெய்லர் இரண்டு நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சமந்தாவின் உடல்நலம் குறித்த செய்திகள் வெளியாகி அவரது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து சமந்தா வெளியிட்ட பதிவில், ‘கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டேன். இந்த நோய் சரியாவதற்கு நான் நினைத்ததை விடவும் அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. இந்தப் பாதிப்புடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் யான்னிக் பென், நடிகை சமந்தாவிற்கு பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆக்சன் த்ரில்லர் படமான 'யசோதா' படத்தின் சண்டைப் பயிற்சி வீடியோ காட்சிகள் படத்திற்கான பல்ஸ் ரேட்டை ரசிகர்களுக்கு கூட்டியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in