பிரபலமான இந்திய நடிகைகள் பட்டியலில் முதலிடம் யாருக்கு?: நயன்தாராவுக்கு 3-வது இடம்?

பிரபலமான இந்திய நடிகைகள் பட்டியலில் முதலிடம் யாருக்கு?: நயன்தாராவுக்கு 3-வது இடம்?

மிகவும் பிரபலமான இந்திய நடிகைகளின் பட்டியலில் நடிகை சமந்தா முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி ’படத்தில் இப்போது நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு உட்பட பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தை ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இதற்கிடையே புராணக் கதையைக் கொண்ட ‘சாகுந்தலம்’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படமும் பான் இந்தியா படமாக உருவாகிறது. ஹரி - ஹரீஷ் இயக்கும் ’யசோதா’ என்ற த்ரில்லர் படத்திலும் சமந்தா நடித்து வருகிறார். ஹாலிவுட் படத்திலும் நடிகை டாப்ஸி தயாரிக்கும் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார் சமந்தா.

’தி ஃபேமிலிமேன் 2’ வெப் தொடர் மூலம் பாலிவுட்டிலும் கவனம் பெற்ற சமந்தா, ’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ’ஊ சொல்றியா மாமா’ பாடல் மூலம் மேலும் பிரபலமானார். இந்நிலையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகை யார் என்பதுபற்றிய கருத்து கணிப்பை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியுள்ளது. இதில் நடிகை சமந்தா முதலிடம் பிடித்துள்ளார். மற்ற தென்னிந்திய நடிகைகளான நயன்தாரா மூன்றாவது இடத்திலும் காஜல் அகர்வால் ஐந்தாவது இடத்திலும் கீர்த்தி சுரேஷ் ஆறாவது இடத்திலும் சமந்தா, பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோர் முறையே எட்டு, ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களையும் பிடித்துள்ளதாக அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலகட்டத்துக்குப் பின் மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை இந்தக் கருத்துக் கணிப்புக் காட்டுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in