இதற்காகத்தான் வீட்டை விட்டு வெளியேறினாரா சமந்தா?

இதற்காகத்தான் வீட்டை விட்டு வெளியேறினாரா சமந்தா?

நடிகை சமந்தா, வீட்டை விட்டு வெளியேறி படத்துக்காக அமைக்கப்பட்ட செட்டில் தங்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி வெப்சீரிஸ் என பிசியாக இருக்கிறார் நடிகை சமந்தா. மும்பை, ஐதராபாத், சென்னை என பறந்துகொண்டிருக்கும் சமந்தா, கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் ’யசோதா’ படத்துக்காக அமைக்கப்பட்ட நட்சத்திர ஓட்டல் செட்டில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

’யசோதா’ செட்
’யசோதா’ செட்

இந்தப் படம், தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது. ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கும் இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்களான ஹரி - ஹரிஷ் இயக்குகின்றனர். வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, மதுரிமா உட்பட பலர் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மணி சர்மா இசை அமைக்கிறார்.

இந்தப் படத்துக்காக ரூ.3 கோடி செலவில் பிரம்மாண்ட நட்சத்திர ஓட்டல் அரங்கு ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கியிருந்து நடிகை சமந்தா நடித்து வருகிறார்.

இதுபற்றி சமந்தாவுக்கு நெருங்கியவர்கள் கூறும்போது, ``படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்க வேண்டி இருப்பதால், செட்டில் தங்கி இருந்து நடிப்பைத் தொடர விரும்பினார் சமந்தா. இதனால், வீட்டில் இருந்து வெளியேறிய அவர், கடந்த சில நாட்களாக இங்குதான் தங்கி இருக்கிறார்’' என்றனர்.

இந்த செட்டை ஆர்ட் டைரக்டர் அசோக் கரலத் தலைமையிலான டீம் மூன்று மாதமாக உழைத்து உருவாக்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in