’போய் குடும்பத்தைக் கவனிங்கப்பா’: நாக சைதன்யா ரசிகர்களை விளாசிய சமந்தா!

’போய் குடும்பத்தைக் கவனிங்கப்பா’: நாக சைதன்யா ரசிகர்களை விளாசிய சமந்தா!

தன்னை வம்புக்கிழுத்த நாக சைதன்யா ரசிகர்களை, நடிகை சமந்தா கடுமையாக விளாசியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. இவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவரும் நடிகை சமந்தாவும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்தார் சமந்தா.

இந்நிலையில், கடந்த வருடம் இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போது இருவரும் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதை அவர் தரப்பு மறுத்தது.

இதற்கிடையே, நாக சைதன்யா, மீண்டும் காதலில் விழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர், நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், நாக சைதன்யாவை பற்றி இப்படி வதந்தி வெளியாக , சமந்தாவின் பி.ஆர் டீம் தான் காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குற்றச்சாடுகளை வைத்தனர். சமந்தாவையும் விமர்சித்தனர்.

இந்நிலையில், அவர்களை நடிகை சமந்தா, ட்விட்டரில் கடுமையாக விளாசியுள்ளார். அதில், ‘ஒரு பெண்ணைப் பற்றிய வதந்தி என்றால் உண்மை என நம்புகின்றனர். அதுவே ஆணைப் பற்றி வதந்தி வந்தால், அதை பெண்தான் பரப்புகிறார் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் சமந்தப்பட்டவர்கள் இருவரும் பிரிந்து சென்று அடுத்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்களும் அதைத் தாண்டி, உங்கள் வேலை, குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள்’ என்று விளாசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in