`உங்கள் பொலிவிற்கு என்னுடைய அன்பைக் கொடுக்கிறேன்’- கமென்ட் செய்தவருக்காக பிரார்த்தித்த சமந்தா!

`உங்கள் பொலிவிற்கு என்னுடைய அன்பைக் கொடுக்கிறேன்’- கமென்ட் செய்தவருக்காக பிரார்த்தித்த சமந்தா!

பழைய பொலிவை இழந்துவிட்டதாக கமென்ட் செய்தவருக்காக பிரார்த்திப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. மையோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு நடிகை சமந்தா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அடுத்த மாதம் வெளியாக இருக்கும் ‘சாகுந்தலம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக நடிகை சமந்தா கலந்து கொண்டார். சிகிச்சைப் பெற்று வருவதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சற்று சோர்வாகவும், உடல் மெலிந்தும் காணப்பட்டார் சமந்தா.

இதனை அடுத்து இவரது தோற்றத்தை வைத்து, ஊடகம் ஒன்று சமந்தாவுக்காக வருத்தப்படுவதாகச் சொல்லி, ’சமந்தா தன்னுடைய அழகையும் பொலிவையும் இழந்துவிட்டார். அவர் விவாகரத்தில் இருந்து மனதளவிலும் வேலை ரீதியாகவும் வெளியே வந்துவிட்டார் என்று நினைத்தபோது எதிர்பாராத விதமாக அவருக்கு மையோசிடிஸ் நோய் தாக்கி மீண்டும் அவரை பலவீனமடையச் செய்துவிட்டது’ என அந்த ஊடகம் பகிர்ந்திருந்தது. இதைப் பகிர்ந்த சமந்தா, ‘மாதக்கணக்கில் நான் மாத்திரை மருந்துகளுடன் கூடிய சிகிச்சை எடுத்துக் கொள்வது போல நீங்களும் பாதிக்கப்படக்கூடாது என வேண்டிக் கொள்கிறேன். உங்கள் பொலிவிற்கு என்னுடைய அன்பைக் கொடுக்கிறேன்’ எனவும் பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in