மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் சமந்தா!

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் சமந்தா!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் நடிகை சமந்தா கலந்துகொள்ள இருக்கிறார்.

நடிகை சமந்தா, ’குஷி ’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. ‘சாகுந்தலம்’, ’யசோதா’ படங்களை முடித்துவிட்டார். அடுத்து டாப்ஸி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே அவருடைய பாலிவுட் அறிமுகம் பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

’ஃபேமிலிமேன் 2’ வெப் தொடரில் நடித்ததன் மூலம் சமந்தா இந்தியிலும் பிரபலமானார். ’புஷ்பா’ படத்தில் அவர் ஆடிய பாடலும் இந்தி ரசிகர்களிடையே புகழைப் பெற்று தந்துள்ளது. இதற்கிடையே இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இதனால் அவருடன் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான, தர்மா புரொடக்‌ஷன்ஸுடன் நடிகை சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார் என்றும் அக்‌ஷய் குமார் ஜோடியாக அவர் இந்தியில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையே அவர் மூன்று பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் (Indian Film Festival of Melbourne) கலந்துகொள்ள இருக்கிறார். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, 2 வருடமாக இந்த விழா நேரடியாக நடக்கவில்லை. ஆகஸ்ட் 12-ம் தேதி நேரடி விழாவாக நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க நடிகை சமந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் அவர் ரசிகர்களுடன் உரையாடவும் இருக்கிறார்.

இதுபற்றி கூறியுள்ள நடிகை சமந்தா, கடந்த வருடம் விர்ச்சுவலாக நடந்த மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டேன். அதில் பங்கேற்றவர்களின் உற்சாகத்தின் காரணமாக, ஆற்றலையும் அதிர்வையும் என்னால் உணரமுடிந்தது. இப்போது அந்த விழாவில் பங்குபெறுவதன் மூலம் அதை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்திய சினிமாவை அதன் அனைத்துப் பன்முகத் தன்மையோடும் கொண்டாடுவது சிறப்பான உணர்வு’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்பட விழாவின் இயக்குநர் மிது போமிக் லாங்கே கூறும்போது, ஆஸ்திரேலியாவில் நடிகை சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த விழாவில் அவர் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தனது நடிப்பின் மூலம், ரசிகர்களிடம் மிகுந்த மரியாதையை அவர் பெற்றிருக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in