சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு பயிலும் சமந்தா

சமந்தா
சமந்தா

சுவிட்சர்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா, அங்கு பனிச்சறுக்கு விளையாட்டைக் கற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா- நாக சைதன்யா, கடந்த சில மாதங்களுக்கு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, விவகாரத்துக்குப் பிறகும் பிசியாக இருக்கிறார்.

அதிகப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் சமந்தா, தமிழில் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் நடித்துள்ளார். ’அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் சில பாலிவுட் படங்களிலும் அவர் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் ரிஷிகேஷ் மற்றும் துபாய்க்கு சென்றுவந்த சமந்தா, புத்தாண்டை கோவாவில் கொண்டாடினார். இதையடுத்து சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். அவருடன் குடும்பத்தினரும் நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டியும் உடன் சென்றுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில், நடிகை சமந்தா கடந்த 4 நாட்களாக பனிச்சறுக்கு விளையாட்டைக் கற்று வருகிறார். இதுபற்றி இன்ஸ்டாவில் தெரிவித்துள்ள சமந்தா, அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதற்கு கருத்துத் தெரிவித்துள்ள பாடகி சின்மயி, “நீங்கள் சிறந்த சாதனையாளர். ஏதாவது போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தோடு வாருங்கள்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in