இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இல்லாத சமந்தா- என்ன காரணம்?

சமந்தா
சமந்தா

திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் படங்கள் குறித்தான அப்டேட் பகிர்வது, தங்களது சொந்த விஷயங்கள் பகிர்ந்து கொள்வது, ரசிகர்களுடன் அடிக்கடி பேசுவது என ஆக்டிவாக இருக்கின்றனர். இதில் தென்னகத்தைப் பொறுத்தவரை நடிகை சமந்தாவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 24 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் தொடர்கிறார்கள். உடற்பயிற்சி வீடியோ, படம் தொடர்பான அப்டேட்கள், பிசினஸ் வேலைகள், மாடலிங் ஃபோட்டோஷூட் என சமந்தாவின் பதிவுகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதற்கேற்றாற் போல சமந்தாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளைப் பகிர்வது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாகவே சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளிட்ட எந்தவொரு சமூக வலைதள பக்கத்திலும் எந்த ஒரு பதிவுகளும் பகிராமல் இருக்கிறார். அண்மையில், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா வேறொரு நடிகையுடன் டேட்டிங் செய்கிறார் என்ற செய்தி வந்தபோது சமந்தா தான் இது போன்ற தவறான செய்திகளை பரப்புகிறார் என்று சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதற்கு தக்க பதிலடி கொடுத்தார் சமந்தா.

மேலும், இந்த மாதத்தில் இருந்து டிஸ்னி+ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான காஃபி வித் கரணில் சமந்தா கலந்து கொண்டு இருக்கிறார். அதில் தனது திருமண வாழ்க்கை, விவாகரத்து ஆகியவை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார் சமந்தா. இந்த நிகழ்ச்சியின் புரொமோஷனுக்காக சமந்தா பேசாமல் இருக்கிறாரா அல்லது இடையில் அவரது சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டது போல வேறு ஏதும் தொழில்நுட்ப கோளாறா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் தவிப்பில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in